Friday, October 30, 2009

11. தலைவி கூற்று



     வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
     நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
     இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
     கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
5   அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
     கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
     எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
     வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
     படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
10  மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
     அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
     நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
     அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
     அழுதல் மேவல ஆகி,
15  பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!

தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது

பாலை
ஔவையார்

1 comment: